UG COURSES PG COURSES
பி.ஏ தமிழ் B.A English B.A History B.Sc Maths B.Sc Physics B.Sc Chemistry B.Sc (CS) B.C.A B.Com B.Com (CA) BBA (CA)

பி.ஏ., தமிழ்

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை 2018 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. தற்போது இத்துறை பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டுள்ளது. தமிழ்த்துறையில் 5 திறமையான தகுதிவாய்ந்த மற்றும் அனுபவம் மிக்க பேராசிரியர்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்படுகிறது. மாணவிகளின் தமிழ்ப் புலமையை மேலும் வளர்க்கும் விதமாகவும் சங்கஇலக்கியச் சிறப்புகளை அனைவரும் அறியும் வகையிலும் படைப்பிலக்கியங்களை வெளிக்கொணரும் வகையிலும் சிறப்பாகச் செயல்படுகிறது.

தொலைநோக்கு சிந்தனை

தமிழ் கலாச்சாரத்தின் பங்களிப்பை பகுப்பாய்வு செய்து அடையாளம் காணுதல், பண்டைய தமிழர்களின் சிறந்த தொழில்துறை, அறிவு ஆகியவற்றை புணரமைத்து புதுப்பிக்க. தமிழின் இலக்கண மற்றும் மொழியியல் கோட்பாடுகளை ஆய்வு செய்தல் தமிழ்மொழி கற்பிப்பதற்கான நவீன முறைகளை உருவாக்குதல். . இலக்கியம், இலக்கணம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்களஞ்சியம் மற்றும் தத்துவம் தொடர்பான தமிழ்க் கலைக்களஞ்சியங்களை வெளியிட ஊக்குவித்தல்.

மேற்கொள்ளும் பணி

புதிய பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள மாணவிகளை ஊக்குவித்தல் மாணவிகளின் சொற்களஞ்சிய அறிவை மேம்படுத்தும் விதமாக எண்ணற்ற புத்தகங்களைக் கொண்டு பயிற்சியளித்தல் மாணவிகளின் கவிதை,கட்டுரை,பட்டிமன்றம் போன்ற எண்ணற்ற திறமைகளை வெளிக்கொண்டு வருதல்.

தமிழ்த்துறையின் நோக்கம்

1. நமது தாய்மொழியான தமிழின் சிறப்புகளை அறியவும், அதை உலகிற்கு எடுத்துச் சொல்லவும் தமிழ் இலக்கிய படிப்புக்கள் உதவுகின்றன. தமிழில் இளங்கலை (பி.ஏ.) முதல் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் வரை பயிலலாம். உடன் கல்வியியல் பட்டமும் படிப்பவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
2. பி.ஏ, பி.எட், எம்.ஏ, எம்.எட். பயிலுவோருக்கு உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியர் பணிகள் கிடைத்து வருகின்றன. அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தமிழ் ஆசிரியர் தேவை உள்ளது.
3. இதேபோல கலை, அறிவியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடத்துக்கு எம்.ஃபில், பிஎச்.டி தமிழ் படித்தோர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
4. அரசின் பல்வேறு துறைகளில் தமிழ் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதாகக் கிட்டுகின்றன. தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழில் பயின்றோர் எளிதாக வெற்றி பெற முடியும்.
5. ஊடகங்களில் வாய்ப்பு: ஊடகங்கள் மொழியை நம்பியே இருக்கின்றன. எழுத்து, பேச்சு என்கிற இரு நிலைகளிலும் தமிழ் படித்தோருக்கான வேலை வாய்ப்புகள் நிரம்ப இருக்கின்றன. குறிப்பாக, இதழியல் துறையில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
6.பத்திரிகைகள், சின்னத்திரை, வானொலி, பண்பலை - இவற்றில் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் தமிழர்கள் வாழும் இடங்களிலும் தமிழ் படித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு.
7. கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான ஸ்லெட், நெட் தேர்வுகளில் தமிழ் ஆய்வு பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வியை நிறைவு செய்யும் வரை மாதம் ரூ. 6,000 முதல் ரூ. 12,000 வரை பல்கலைக்கழக மானியக் குழு ஊக்கத் தொகை தருகிறது.